என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » துப்பாக்கிச் சண்டை
நீங்கள் தேடியது "துப்பாக்கிச் சண்டை"
தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட புல்வாமா மாவட்டத்தில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். #PulwamaEncounter
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய, தற்கொலைத் தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தின் பிங்லன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் ராணுவ மேஜர் உள்ளிட்ட 4 வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. #PulwamaEncounter

எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலை முறியடிக்க ராணுவம் பதிலடி கொடுக்கும் என அரசும் கூறியுள்ளது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத சக்திகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தின் பிங்லன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் ராணுவ மேஜர் உள்ளிட்ட 4 வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. #PulwamaEncounter
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று ராணுவ வீரர்களுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #militantskilled #Baramulaencounter #Kashmirencounter
ஜம்மு:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்துக்கு உட்பட்ட பீன்னர் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று பிற்பகல் அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து நீடித்துவரும் துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராணுவ தரப்பில் உண்டான இழப்பு தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #militantskilled #Baramulaencounter #Kashmirencounter
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் இன்று நடைபெற்றுவரும் தேடுதல் வேட்டையின் போது துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். #Militantkilled #Pulwamaencounter
ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்துக்கு உட்பட்ட டார் கானி குன்ட் கிராமத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சிற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து நடைபெற்றுவரும் துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #Militantkilled #Pulwamaencounter
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் உடனான துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PakistanGunbattle
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ஒரு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து, பயங்கரவாதிகளை பிடிக்க முயற்சி செய்துள்ளனர்.
பாதுகாப்பு படையினர் வருவதை அறிந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 3 பேர் தப்பியோடி விட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கொல்லப்பட்ட அனைவருக்கும் கடந்த ஆண்டு பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி அலுவலகம் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #PakistanGunbattle #tamilnews
×

X